தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அரசப்பட்டு கிராமத்தில் சுமார் ஐந்துக்கு மேற்பட்ட விவசாய நில பம்பு செட்டு மோட்டார் க்கு பயன்படும் மின்சார வயர்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் வயர்களை திருடி சென்றுள்ளனர்.

வழக்கம்போல் காலையில் விவசாய பணிக்காக வயலுக்கு சென்று பார்த்த விவசாயிகளுக்கு மோட்டார் வயர்கள் திருடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இது தொடர்பாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் அரசப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகையன், ரவிச்சந்திரன், பவுன்ராஜ், முருகேசன், கௌதம் ஆகிய விவசாயிகளின் போர் செட்டில் பொருத்தப்பட்டிருந்த மோட்டாரின் வயர்களை மர்ம நபர்கள் அறுத்து சென்று விட்டதாக போலீசில் புகார் கொடுத்தனர்.

அடிப்படையில் ஒரத்தநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகளில் இதுபோன்று மோட்டார்ஸ் பம்புகளின் வயர்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.