• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் – எம்.பி.விஜய்வசந்த் துவக்கி வைத்தார்…

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் காலை உணவு விரிவாக்க திட்ட துவக்க விழா குமரி மேற்கு பகுதியில் உள்ள மார்த்தாண்டம் அரசு தொடக்கப்பள்ளி, களியக்காவிளை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு முஸ்லிம் தொடக்க பள்ளிகளில் இன்று (25-8-2023) நடைபெற்றது.
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மார்த்தாண்டம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினர். பெரும் தலைவர் காமராஜர் அவர்களால்  பள்ளிகளில் மதிய உணவு திட்டம் துவங்கப்பட்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால்  முட்டை மற்றும் சுண்டலுடன் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போதைய முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு காலை சிற்றுண்டி வழங்கும்  திட்டம் கொண்டு வந்துள்ளார்கள் முதல்வர் அவர்களுக்கு நீங்கள் மிக பெரிய நன்றியை தெரிவித்து கொள்ளுங்கள் என பேசினார்.    
நிகழ்ச்சியில் குழித்துறை நகர் மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி, காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், நகராட்சி ஆணையாளர் ராமதிலகம், வட்டார கல்வி அலுவலர் சந்திரசேகரன் உட்பட வார்டு உறுப்பினர்களும், காங்கிரஸ் நிர்வாகிகளும், தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.