தமிழ் நாடு அரசுப் பணி தேர்வாணையம் நடத்திய தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியில் அய்யா வைகுண்டர் மீது வேண்டுமென்ற அவதூறு பரப்பிய அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு அதிகாரிகள் ஆர்எஸ்எஸ், பாஜக ஆதரவாளர்களாக இருந்து, தமிழக அரசுக்கு பொது மக்களின் மத்தியில் ஒரு அவ பெயரை உருவாக்கும் இந்த முயற்சி துளிர் விடும் போதே கிள்ளி எறிந்து விடவேண்டும்.
அய்யாவின் பெயரான முடிசூடும் பெருமாள் என்பதை ஆங்கிலத்தில் அப்படியே எழுதி விடலாம் அதை விடுத்து ஆங்கிலம் மொழி மாற்றம் என்ற பெயரில் முடி வெட்டும் பெருமாள் என எதற்காக மாற்றி எழுத வேண்டும்.

கேள்வி தாள்கள் தயாரிக்கும் அதிகாரிகள் முட்டாள்கள் என்பதை இந்த செயல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விட்டால் வழக்கறிஞரான நான் முட்டாள் அதிகாரிகளின் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து கூண்டில் ஏற்றுவேன் என் உணர்ச்சி மிகுந்த குரலில் தெரிவித்தவர்.
தமிழக முதல்வர் இத்தகைய ஆர்எஸ்எஸ் ஊடுருவலை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட
தமிழ் நாடு அரசுப் பணி தேர்வாணையம் உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.