

ஆந்திராவில் நடைபெற்ற வளைபந்து போட்டியில் தங்கபதக்கம் வென்ற திருத்தங்கல் வீரருக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.
ஆந்திரமாநிலம் ஸ்ரீகாகுலம் பாலசாவில் நடைபெற்ற 47வது தேசிய சீனியர் வளைபந்து போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிவகாசி மாநகர் திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியை சேர்ந்த தேவராஜ் -பொன்னுத்தாய் மகன் வில்சன் முதல் பரிசாக தங்கப்பதக்கமும், குழுப்போட்டியில் மூன்றாம் பரிசாக வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தார். சாதனை படைத்த வீரர் வில்சனை அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கினார். கழக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட கழக துணைச்செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் பலராம், திருத்தங்கல் கிழக்கு பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு பகுதி கழக செயலாளர் சரவணக்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரமணா, சிவகாசி கிழக்கு பகுதி கழக செயலாளர் சாம் (எ) ராஜா அபினேஷ்வரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

