ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடனான சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன் கூறும் போது செயற்குழுவில் ஆலோசனை நடத்திய பின் முடிவை அறிவிப்பதாக தகவல்
கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதி உள்பட அனைத்து சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று கமல்ஹாசனை சந்தித்து பேசினார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடனான சந்திப்புக்கு பின்னர் கமல்ஹாசன் கூறியதாவது: செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்த பின் முடிவை அறிவிப்போம். மக்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை பற்றி கூட்டத்தில் ஆலோசிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தரும் என்றும் முதலில் சுட்டிக்காட்டியது அரசியல் டுடே டாட் காம் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறோம்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் – கமல்ஹாசன் சந்திப்பு.. ஆலோசித்து முடிவை அறிவிப்பதாக தகவல்








