தேனி மாவட்டம் சின்னமனூரில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பாக மாலை நேரமினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இன்று இந்தியா முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சுதந்திரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பலவித நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் சின்னமனூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் பாலசுப்பிரமணியன் தனலட்சுமி நினைவாக மாலை நேரம் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த மினி மரத்தான் போட்டியை தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரால்டு அலெக்சாண்டர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மினி மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 8 கிலோமீட்டர் தூரமும் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும்,
இதே போல் 12 வயதிற்கு மேல், 40வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் 2 கிலோமீட்டர் தூரம் என மூன்று விதமான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் சுமார் 600 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாரத்தான் போட்டியானது சின்னமனூர் தாய் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தொடங்கி தூர மீட்டர் எல்லைக்கு ஏற்றவாறு நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்க தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டது.








