ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரு நாளில் கொட்டி தீர்த்தால் எங்கு தண்ணீர் நிற்கும் என்பதை நம்மால் முடிவெடுக்க முடியாது. நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டினாலும் நீ அதை பயன்படுத்த முடியாது என அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார்.
சென்னை பரங்கி மலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தனியார் கட்டுமான தொழிற்சாலை சங்கத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அமைச்சர் முத்துசாமி கூறியதாவது..,
2019க்கு பின்னால் பல சட்ட, திட்டங்கள் வந்தாலும் அதில் இருக்கக்கூடிய சில குறைபாடுகளை, சில பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என கேட்டார்கள். இன்றைக்கு முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் மிகப்பெரிய அளவிலே ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்கள்
குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், 2500 சதுர அடி இருக்கக்கூடிய ஒரு இடத்திலே 3500 சதுர அடி வரை கட்டிடம் கட்டிக் கொள்வதற்கு சுயசான்று போதும் அரசாங்கத்தில் அரசு அலுவலகங்களில் மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தால் போதும். முதல்வர் இதை அறிமுகப் படுத்தப்பட்ட சில மாதங்கள் ஆகிய நிலையில் சுமார் பத்து மாதத்தில் 67 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். இப்படி பல திட்டங்களை என்னால் சொல்ல முடியும். மீண்டும் வைத்த கோரிக்கையில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீட்டு வசதி வாரியம் கட்டப்படும் கட்டிடத்தைப் பற்றி தான் நான் பேச முடியும் தொகுப்பு வீடு பல நீண்ட நாட்களுக்கு முன்னால் கட்டப்பட்டது. அதை நாங்களும் சென்று பார்த்தோம். அதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதற்கு தமிழக முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி அதற்குண்டான ஏற்பாட்டை செய்து வருகிறார்கள்.
தண்ணீர் நிற்கக்கூடிய இடங்களில் கட்டுமான நிறுவனத்தினரே அங்கு என்ன செய்ய வேண்டும் என பார்க்க வேண்டும். நாம் தூண் தளம் என்று கொடுக்கின்றோம். அந்த ஸ்டில் ப்லோர் அதுபோன்று இருந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கும். நீங்கள் கூறுவதை நாங்கள் தனி கவனம் எடுத்து பார்க்க தயாராக இருக்கின்றோம்.
நீர்த்தேக்க பகுதிகளில் நிரந்தரமாக அனுமதிப்பது கிடையாது. கடும் மழை பொழியும் பொழுது, அதாவது ஒரு ஆண்டில் பெய்யக்கூடிய மழை ஒரு நாளில் கொட்டி தீர்த்தத்தை நாம் பார்த்தோம். அந்த மாதிரி சமயத்தில் எந்த இடத்தில் நிற்கும் என்பதை நம்மால் முடிவெடுக்க முடியவில்லை. ஆனால் ஒரு நீர் நிலை இருக்கக்கூடிய பகுதியில் கண்டிப்பாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி கிடையாது.
நீர்நிலைகளில் இனி அது போன்ற கட்டிடங்கள் கட்டினாலும் இனி அவை பயன்படுத்துவதற்கு வாய்ப்பில்லை மின்சாரம் தர மாட்டோம். ஆகையால் சமீபமாக அந்த மாதிரி செய்து இருக்கிறோம். என்ன காரணம் என்றால் யாரையும் தொல்லை பண்ணுவதற்காக அல்ல. விதிமுறைக்கு உட்பட்டும் அந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். சங்கத்தின் மூலம் சரி செய்ய வேண்டும் என கூறுகின்றேன்.