பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பாரம்பரிய முறையில் மஞ்சள், கரும்பு உள்ளிட்டவற்றுடன் பொங்கல் வைத்து நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கயிறு இழுத்தல், இசை நாற்காலி, சிலம்பம் சுற்றுதல், சட்டி உடைத்தல் உள்ளிட்ட தமிழர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





