• Sun. May 12th, 2024

குமரியில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா..!

குமரியில் கலப்பை மக்கள் இயக்கத்தின் 10வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. நீலக்கடற்கரையில் வெண் அலைக் கூட்டங்கள் முன்பு 1008 பானைகளில் பொங்கி வழிந்தது வெண் பொங்கல் நுறை பானைகள்.
கன்னியாகுமரியை அடுத்த ரஸ்தாகாடு நீண்ட கடற்கரையில், நேற்று மாலை (ஜனவரி-11)ம் நாள் திரைப்பட தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் தலைமையிலான கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பில் 10வது ஆண்டு பொங்கல் விழாவில் 1,008 பானைகளில் வெண் துறை பொங்கல், நீலக்கடல் அலைக்கூட்டங்கள் கரை தொட்டு தாலாட்ட, கடற்கரை வெண்மணல் பரப்பில், குமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பி.டி. செல்வகுமார், ஆரோக்கியபுரம், ஆரோக்கிய மாதா தேவாலைய பங்கு தந்தை அருட்பணி மதன், பூஜித குரு பாலபிரஜாதிபதியடிகள், குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், பல்வேறு சமுக அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில், ரஸ்தாகாடு கடல் மணல் பரப்பில் நீண்ட விரிசையில் இருந்த புத்தம் புது பொங்கல் பானைகளில் முதல் பொங்கல் பானையை சுமக்கும் அடுப்பில், குமரி மக்களவை உறுப்பினர் தீ யை பற்றவைத்து பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.


வரிசையான பானைகளில் பொங்கல் பொங்கி வர அன்னையர் குலம் குலவை இட்டு பொங்கிய பொங்கல் கண்டு மகிழ்ச்சி அடைய. அன்னையர் எழுப்பிய குலவைக்கு எசை பாட்டுப்போல் கடல் ஓசை எழுப்பியது, இயற்கையும் வாழ்த்துகள் செல்வதாக கூடியிருந்த கூட்டம் அகம் மகிழ்ந்து கை ஒலி எழுப்பி சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நிகழ்வில் பொங்கல் இட்ட மங்கையர்கள் பொங்கலிட்டு 1,008 சில்வர் பானைகளை விஜய் வசந்த் அவரது சொந்த செலவில் வாங்கி கொடுத்ததை. பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற அனைவரும் பாராட்டினார்கள்.

பழம் பெரும் தமிழ் கலைகளான தாரை, தப்பட்டை,பறை,சிலம்பாட்டம் பொங்கல் விழாவில் கலைஞர்கள் நிகழ்த்தியதுடன், பரதநாட்டியமும் நிகழ்வில் நடைபெற்ற து. பொங்கல் இட்ட பெண்கள் மட்டும் அல்லாது பார்வையாளர்களாக பங்கேற்ற பெண்களுக்கு, பொங்கல் பரிசுடன் செங்கரும்பும் கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பில் வழங்கினர்.
குமரி ரஸ்தாகாடு கடற்கரையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவின் இனிய நினைவுகள் இன்னும் சில மாதங்கள் மனதில் தொடரும் ஒரு இனிய நினைவாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *