தமிழர் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி, தமிழ் பண்பாடு கலாச்சாரம் உள்ளிட்டவற்றை போற்றும் பலர் வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்..

இந்த நிலையில் கோவையில் பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மத பாகுபாடின்றி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவ பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது..
இதன் தொடர்ச்சியாக கோவை பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக 16 வது ஆண்டாக நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவரும்,தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினரும் ஆன முகம்மது ரபி தலைமை தாங்கினார்..
இதில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் கலந்து கொண்டார்..
நிகழ்ச்சியில்,கரும்பு வாழை நட்டு, பொங்கல் வைத்து , தமிழின பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது . இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் , பொதுமக்கள் பொங்கல் பானையில் அரிசி வெல்லம் பால் இட்டு பொங்கல் பொங்கினர் . பொங்கல் விழாவில் கொலவையிட்டு, ஆடல் பாடல்களுக்கு நடனமாடி , கண் கட்டி பானை உடைத்து பொங்கல் கொண்டாடினர் .
இது போன்ற சாதி மத பேதமில்லாமல் நாட்டிலுள்ள பொதுமக்கள் மத நல்லிணக்க விழாக்களை கொண்டாட்ட வேண்டும் எனவும் வேற்றுமையில் ஒற்றுமை, பன்முக கலாச்சாரம் கொண்ட இந்த நாட்டில், மத நல்லிணக்கமே மனிதம் மலர உதவும் என பல்சமயம் நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரபி தெரிவித்தார்.

தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,இரத்தினபுரி முகம்மது அலி,மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முகம்மது இஸ்மாயில்,சந்திர சேகர்,காமராஜ்,டிஸ்கோ காஜா,எஸ்.ஏ.பஷீர்,கோட்டை செல்லப்பா,அபுதாகீர்,அய்யூப் பாகவி,அப்துல் ரஹ்மான்,டோனி சிங்,அருட்தந்தை ரஃபேல்,ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..




