• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அண்ணன் ஓபிஎஸ் என அன்போடு அழைத்த இபிஎஸ்

ByA.Tamilselvan

Jun 23, 2022

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தில் ஓபிஎஸை அண்ணன் என இபிஎஸ் அழைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடியது.
இக்கூட்டத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முன்மொழிந்தார் .இதனைத் தொடந்து “அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் முன்மொழிந்ததை நானும் வ ழிமொழிகிறேன் என்று கூறி தனது இருக்கையில் அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி.