• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

ப்ரீமியம் திரைப்பட அனுபவத்தை வழங்கும் எபிக் ஸ்க்ரீன் துவக்கம்..,

BySeenu

Oct 19, 2025

ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா எனும் பிரபல மல்டி ப்ளெக்ஸ் கியூப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆர்-எபிக் ராஜபாளையம்’ எனும் புது அரங்கத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த அரங்கில் கியூப் நிறுவனத்தின் பிரீமியம் பெரிய வடிவ திரை மற்றும் தியேட்டர் வசதிகள் இடம்பெற்றுள்ளன. இது தென் தமிழகத்தில் உள்ள ரசிகர்களுக்கு உலகத் தரத்திலான திரைப்பட அனுபவத்தை வழங்கும்.

மதுரையில் எபிக் திரையரங்கிற்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, வழக்கமான திரைப்பட அனுபவத்தை மறுவரையறை செய்யும் பயணத்தை ரேடியன்ஸ் சினிமா இந்த புதிய திரையரங்கின் மூலம் தொடர்கிறது. இந்தத் தொடக்கத்தின் மூலம், இந்தியா முழுவதும் செயல்படும் எபிக் திரைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு முன் கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், கோழிக்கோடு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் வெற்றிகரமான திரைகள் நிறுவப்பட்டுள்ளன.

ராஜபாளையத்தில் உள்ள ஆர்-எபிக் வசதி உள்ள அரங்கில் பிரமாண்டமான திரை, ஸ்டேடியம் பாணியிலான இருக்கை அமைப்பு மற்றும் முழுமையான வசதிக்காக வடிவமைக்கப்பட்ட சூழல் இடம்பெற்றுள்ளது.

இந்தத் திரையரங்கம் அதிநவீன பார்க்கோ (Barco 4K RGB Laser) லேசர் புரொஜெக்‌ஷன் , டால்பி அட்மாஸ் (Dolby Atmos) அதிவேக ஒலி அமைப்பு மற்றும் 1.9 ஸ்கிரீன் ஆஸ்பெக்ட் ரேஷியோவைக் (screen aspect ratio) கொண்டுள்ளது. இது துல்லியமான தெளிவு, மேம்படுத்தப்பட்ட ஒளி மற்றும் பிரமிக்க வைக்கும் வண்ணத் துல்லியம் ஆகியவற்றை வழங்குகிறது. பெரிய வடிவ திரையரங்கு ஆர்வலர்களின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், கியூப் சினிமா, திரைப்படங்களைச் சிறப்பான EPIQ DCP-களாகவும் தரமுயர்த்தி வழங்குகிறது

இந்த விரிவாக்கம் குறித்து பேசிய கியூப் சினிமாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்ஷ் ரோஹத்கி, “மதுரையில் எபிக்-கிற்கு கிடைத்த அபாரமான வரவேற்பு, மெட்ரோ நகரங்களில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள பார்வையாளர்கள் பிரீமியம் சினிமா அனுபவத்தைத் தான் விரும்புகிறார்கள் என்ற எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தியது, என்றார்.

” ராஜபாளையத்தில் இந்தப் புதிய திரையரங்கைத் தொடங்குவதன் மூலம், உலகத் தரமான திரைப்பட அனுபவங்களை வெகு தூரங்களுக்கும் கிடைக்கச் செய்கிறோம். திரைப்பட ஆர்வலர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் எபிக் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்,” என்று கூறினார்.

ரேடியன்ஸ் சினிமாவின் நிர்வாக இயக்குநர் ராமபிரகாஷ் கூறுகையில், “மதுரையின் எபிக் ஒரு திருப்புமுனையாக இருந்தது – பார்வையாளர்கள் அதை மிகுந்த உற்சாகத்தோடும் பெருமையோடும் ஏற்றுக்கொண்டார்கள். ராஜபாளையத்தின் எபிக் அரங்கு மூலம், அதே மாயாஜாலத்தை தீவிர சினிமா ரசிகர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று கூறினார்.