• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவையில் ஆகஸ்ட் 3 ந்தேதி “சில்லுனு ஒரு ஈவ்னிங்” எனும் பொழுது போக்கு கண்காட்சி

BySeenu

Jul 28, 2024

ஏழை பெண்களின் கல்விக்கு நிதி திரட்டும் விதமாக பெண் தொழில் முனைவோர்கள் இணைந்து கோவையில் வரும் ஆகஸ்ட் 3 ந்தேதி சில்லுனு ஒரு ஈவ்னிங் எனும் பொழுது போக்கு கண்காட்சி நடைபெற உள்ளது.

கோவையை சேர்ந்த (Refresh L.L.C.) ரெப்ரஷ் எல்.எல்.சி மற்றும் (Set up Dance Company) செட்டப் டான்ஸ் கம்பெனி ஆகியோர் இணைந்து சில்லுனு ஒரு ஈவ்னிங் எனும் புதிய பொழுது போக்கு கண்காட்சியை வரும் ஆகஸ்ட் 3 ந்தேதி ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள
பிஷப் அப்பாசாமி கல்லூரி வளாகத்தில் நடத்த உள்ளனர்..

ஏழை குடும்ப பெண்களின் கல்விக்கு நிதி திரட்டும் விதமாக நடைபெற உள்ள இந்த கண்காட்சியை முழுவதும் பெண் தொழில் முனைவோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சுங்கம் பகுதியில் உள்ள செட் அப் டான்ஸ் கம்பெனி அரங்கில் நடைபெற்றது.

ரெப்ரஷ் எல்.எல்.சி இயக்குனர் மெலினா, ஒருங்கிணைப்பாளர் ரோஷினி எம்சி ரியா,
செட் அப் டான்ஸ் கம்பெனி நிர்வாக இயக்குனர் விக்னா,ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

இதில் கவுரவ அழைப்பாளர்களாக, பெண் தொழில் முனைவோர்கள் புவனா நகுல், கிரேசி செலின், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பெண்கள், தொழில் முனைவோர்,இளம் நடன கலைஞர்கள், கல்லூரி மாணவ மாணவியர் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளதாகவும், ஒரு நாள் நடைபெற உள்ள கண்காட்சியில்,பல்வேறு வகையான உணவு அரங்குகளுடன்,, காமெடி, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான ஆடை அணிகலன் அணி வகுப்புகள், சமையல் போட்டிகள்,நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவத்தனர்.

ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு உதவிகள் வழங்க நிதி திரட்டும் வகையில் பிற்பகல் 3 மணிக்கு துவங்கி இரவு ஒன்பது மணி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் சுமார் நான்காயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தனர்.