
தமிழகத்தில் ஜூலை 22 முதல் பொறியியல் கலந்தாய்வு தொடங்க இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
வருகின்ற ஜூலை 22 முதல் 26 ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை பொது பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர சுமார் 1.80 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே ஐந்தாம் தேதி தொடங்கி ஜூன் நான்காம் தேதி நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.