சுற்றுசூழல் மாசை தடுக்க எலக்ட்ரிக் வாகனங்கள் பயனுள்ளதாக இருப்பதாக காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தனியார் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் புதிதாக 4 பேட்டரி ரோந்து கார்கள் வாங்கப்பட்டுள்ளதை பயன்பாட்டிற்காக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து மாநகர காவல் ஆணையர் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறுகையில்.., தமிழக அரசின் அனுமதி பெற்று, தனியார் நிறுவன சி.எஸ்.ஆர் நிதி பங்களிப்புடன் 4 பேட்டரி வாகனம் ரோந்து பணிக்காக வாங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். முதல் முறையாக போக்குவரத்து போலீசாருக்கு ரோந்து பணிக்காக 2 பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் இது மாநகர மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ரோந்து பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் மேலும் 2 வாகனங்கள் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கோவை மாநகரில் சுற்றுசூழல் மாசை தடுக்கும் வகையில் மாநகர போலீஸில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம் எனவும் அதன் ஒரு பகுதியாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம் எனவும் அதற்கு இந்த வாகனங்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார்.