இந்தியாவிலேயே திண்டுக்கல்லில் தேவாங்கு சரணாலயம் இருப்பதை பெருமைப்படுத்தும் விதமாக தேவாங்கு உருவத்திலான தேர்தல் விழிப்புணர்வு லோகோ வெளியிடப்பட்டது.

சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 சம்பந்தமாக திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் Logo வெளியிடப்படவுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்டத் தேர்தல் அலுவலர் சரவணன் கூறும்போது 20 தினங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே தேவாங்கு சரணாலயம் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. அதன் காரணமாக தற்போது தேவாங்க வடிவிலான தேர்தல் விழிப்புணர்வு லோகோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த லோகோவிற்கு DINDU (டின்டுஉ) என பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



