• Wed. Feb 25th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்- அதிமுக தலைமை கழகத்தில் நூல் வெளியீடு!

நமது அரசியல் டுடே வார இதழில் கடந்த மே மாதம் முதல், “சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார்” என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி அதிரடி அரசியல் தொடரை எழுதி வந்தார்.

32 வாரங்களாக வெற்றிகரமாக நமது அரசியல் டுடே வார இதழில் வெளிவந்த அந்தத் தொடர் புத்தக வடிவமாக இன்று பிப்ரவரி 24ஆம் தேதி புத்தகமாக மலர்ந்தது.

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டங்களின் முக்கியமான நிகழ்ச்சியாக, சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற புத்தகத்தை, அதிமுகவின் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டார்.

இந்த நூலினை எழுதிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி, மற்றும் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் இந்த நூலை பெற்றுக்கொண்டனர்.
நமது அரசியல் டுடே வார இதழின் ஆசிரியர், தாழை பப்ளிகேஷன்ஸ் நிறுவனத் தலைவர் தா பாக்கியராஜ் அவர்களிடம் இந்த புத்தகத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் கே டி ராஜேந்திர பாலாஜி.

எடப்பாடியாரோடு துணை பொது செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ். பி. வேலுமணி, கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ஏனைய முக்கிய நிர்வாகிகள் சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் புத்தகத்தை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு வெளியிட்ட காட்சி நமது அரசியல் டுடே வாசகர்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

அதிமுகவின் முதலமைச்சராக பணியாற்றிய எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடியார் ஆகியோரின் ஆட்சி காலத்தில் நிகழ்த்தப்பட்ட சமூக நீதி சாதனைகளையும் மக்கள் நலத் திட்டங்களையும் இந்த புத்தகம் விரிவாக ஆவணப்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.