நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணி வரமாட்டார் என கூற முடியாது, தேர்தலுக்கான காலம் கிடப்பதால் முடிவுகள் மாறலாம் என சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேட்டி நல்ல முடிவு எடுத்தால் விஜய் புத்திசாலி, அவர் முடிவு எடுக்க முடியாமல் ஏதோ சக்திகள் தடுத்தால் அவரது எதிர்கால அரசியல் வளர்ச்சியில் இடையூறுகள் ஏற்படும் எனவும் அறிவுரை

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் மாவட்டத்தில் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கான முன்னேற்பாடு பனிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கலாச்சையாளருமான கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.டி. ராஜேந்திர பாலாஜி,
மதிமுக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
ஓரணியில் தமிழ்நாடு என்ற கருத்து காலம் முடிந்த பின்பு தான் ஸ்டாலினுக்கு யோசனையாக வந்துள்ளது. ஆட்சி முடிய போகும் நேரத்தில் ஓரணியில் அவரது குடும்பம்தான் உள்ளது. தமிழ்நாடு இல்லை.
தமிழக மக்கள் தவித்துப் போய் உள்ளனர். குடிக்க தண்ணீர் இல்லை. சாப்பிட உணவு இல்லை. வேலை செய்ய தொழில் இல்லை. வரவுக்கும் செலவுக்கும் பணம் இல்லை. மக்கள் வெறும் பையுடன் தான் திரிகின்றனர். ஸ்டாலின் குடும்பம் தான் சுபிட்சமாக சந்தோசமாக நன்றாக உள்ளனர்.
ஓரணியில் தமிழ்நாடு என்பது மக்களை குழப்புகின்ற வேலை. தமிழ் மக்கள் சரியான பதிலடி யை வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு கொடுப்பார்கள். அதிமுக- பாஜக கூட்டணியானதிலிருந்து திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.
கூட்டணி கட்சிகளுக்குள் யார் மூலமாக பிரச்சினை வந்தாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் பதில் கூறத்தான் செய்வோம்.
அதிமுக பாஜகவுக்கு அடிமைக் கட்சி கொத்தடிமைக் கட்சி என்றுதான் எப்போதும் எதிரணியினர் பேசுகின்றனர். அப்படி என்றால் காங்கிரசுக்கு திமுக அடிமையா? மொழி, இனப் பிரச்சனையை தூண்டுவது திமுகவின் நாடகம்.
அதிமுகவும் பாஜகவும் விழிப்பாக முழிப்பாக உள்ளது. தமிழக மக்கள் விவரமாக உள்ளனர். திமுகவுக்கு மக்கள் ஆப்பு அடிப்பார்கள் அதிமுக தான் ஜெயிக்கும்.
காங்கிரசை காலம் முழுவதும் எதிர்த்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தோளில் உட்கார்ந்து பயணம் செய்வது எந்த விதத்தில் சரியான நியாயம்.
எதிரெதிர் அணியாய் இருந்த காங்கிரசும், கம்யூனிஸ்டும் கைகோர்க்கிறது. காலமும் சூழ்நிலையும் சூழ்ச்சியும் மாறும்பொழுது தேசத்தின் ஒற்றுமை நலனுக்காக நாட்டின் மாநிலத்தின் நலனுக்காக அதிமுக எடுத்துள்ள முடிவு அற்புதமான முடிவு.

திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் எங்களுக்கு பெரும் ஆதரவு தான்.
அடித்தட்டு மக்களின் வாக்குகள் எங்களுக்கு நிறைய கிடைக்கும். எங்களுக்கு மிகப்பெரிய பலம் தான். அதிமுக பாஜக கூட்டணி ஒவ்வாத கூட்டணி அல்ல. காங்கிரசும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வைத்துள்ள கூட்டணி தான் ஒவ்வாத கூட்டணி.
இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவுக்கு ஆதரவா இருந்து ஈழத் தமிழர்களையும் விடுதலைப் புலிகளையும் கொன்ற கட்சி காங்கிரஸ். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு முட்டுக் கொடுத்தது திமுக முரண்பட்ட கட்சிகள் கொண்ட கூட்டணி திருமாவளவன் வைத்துள்ள கூட்டணி.
தேசமும், தெய்வீகமும் பாதுகாக்க பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது.
தேர்தல் களத்தில் அதிமுகவும், திமுகவும் தான். மூன்றாவது அணி அமைத்த கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. களத்தில் பேசப்பட்ட கட்சிகள் பேசப்பட்டவர்கள் பின்பாக பேசும் பொருளாகி விடுவார்கள்.
அதிமுக,திமுக தவிர்த்து மற்ற கட்சிகள் விட்டில் பூச்சி மாதிரி. பல கட்சிகள் வரும், ஆனால் தேர்தல் களத்தில் நிற்க முடியாது. பூத் கமிட்டி அமைப்புகள் கூட கிடையாது.
பாஜக அதிமுக கூட்டணியில் இணைய மாட்டேன் என விஜய் கூறிய கருத்திற்கு பதிலளித்த அவர்,
தமிழக வெற்றி கழகத்தில் களப்பணியாளர்கள் கிடையாது.
நடிகர் விஜய்யின் பேச்சை, அவர் பேசுவதை கேட்க வேண்டாம். அவர் யார் பேச்சையோ கேட்டு, யாரோ எழுதிக் கொடுப்பதை பேசுகிறார். அவரிடம் வரும் பெரிய மோகத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதன் எதிரொலி வரும் தேர்தலில் தான் தெரியும்.
திமுக கூட்டணி தான் பிரச்சனைக்குரிய கூட்டணியாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு என ஓரங்க நாடகத்தை திமுக போடுகிறது. காங்கிரஸ் கட்சியில் ஒரு கூட்டம் போட்டால் யார் வருவார்கள் 4- கார்கள் வரும், 16- பேர்கள் வருவார்கள். அதிமுகவில் கூட்டம் போட்டால் 500 பேர்கள் வருவார்கள்.
காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஆளே கிடையாது. திமுக தான் காங்கிரசை சுமந்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கு அப்பாற்பட்ட ஒரு கட்சி தான் காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் முடிவுகள் இந்தியாவிற்கு அப்பால்தான் எடுக்கப்படுகிறது.
பாஜகவும், அதிமுகவும் இந்தியாவின், தமிழ்நாட்டின் நன்மைக்காக இங்கே முடிவெடுத்து செயல்படுகிறது. காங்கிரசார் வெளிநாட்டில் முடிவெடுத்து இந்தியாவில் நிறைவேற்ற பார்ப்பார்கள். எனவே காங்கிரஸ் கட்சி எல்லாம் இனி ஒரு காலமும் கரை சேராது.
பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமுறைகளை மீறினால் உரிமம் ரத்து என்ற காரணத்தை வைத்து பட்டாசு ஆலை உரிமையாளர்களை பயங்கரவாதிகள் போன்று திமுக அரசு சித்தரித்து வருகிறது.அப்படி செய்தால் அதிகாரிகளின் பதவியை ரத்து செய்வோம்.
பட்டாசு தொழில் செய்பவர்கள் பயங்கரவாதிகள் அல்ல அவர்கள் பாவப்பட்டவர்கள்.
பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வின் போது தவறுகள் இருந்தால் நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுத்து அதனை சரி செய்யலாம்.
அதிமுக ஆட்சியில் பட்டாசு தொழிலுக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது.
அதிமுக ஆட்சி அமைந்த உடன் பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும். திமுக ஆட்சியின் நாலரை வருடத்தில் நாலரை லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு குறிப்பாக சிவகாசிக்கு எத்தனை கோடி நிதி ஒதுக்கி உள்ளார்கள் சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி யார் கொண்டுவரப்பட்ட திட்டம் அதற்கான முழு முயற்சியும் நான் எடுத்துக் கொடுத்துள்ளேன். திருத்தங்கள் ரயில்வே மேம்பாலம் சாத்தூர் இருக்க கூடிய செல்லும் வழியில் உள்ள மேம்பாலம் உள்ளிட்ட பணிகளும் தொடங்கப்பட்டன.
ஆனால் திமுக முட்டுகட்டை போட்டு நிறுத்தி வைத்துள்ளது. அதனை தற்போது செய்து திமுக என ஸ்டிக்கர் ஒட்டி திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் போன்று மக்களை ஏமாற்ற முயற்சி செய்கின்றனர்.ஆனால் சிவகாசி நகர் மக்கள் ஏமாற தயாராக இல்லை.அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக ஆட்சியில் செயல்படுத்துகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே அதிருப்தியாக உள்ளது. கூட்டணிக்குள் பிரச்சனையாய் இருந்து சந்தோஷம் இல்லாமல் இருப்பதால் அனைத்து கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.
நடைபெற உள்ள தேர்தலில் மக்கள் திமுகவை தனிமைப்படுத்தி விடுவார்கள். பலமான, வெல்லக்கூடிய, வெல்கின்ற, அற்புதமான, தமிழக மக்கள் விரும்பக்கூடிய கூட்டணியை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார், எடுத்துவிட்டார், எடுத்துக் கொண்டே இருப்பார்.
நடிகர் விஜய் எங்களுடன் கூட்டணி வரமாட்டார் என கூற முடியாது. தேர்தலுக்கான காலங்கள் இன்னும் கிடக்கிறது. ஒரே நாளில் கட்சியை கலைத்தவர்கள் கூட உள்ளனர். காலம் கிடப்பதால் முடிவுகள் மாறலாம். நல்ல முடிவு எடுத்தால் விஜய் புத்திசாலி. அவர் முடிவு எடுக்க முடியாமல் ஏதோ சக்திகள் தடுத்தால் அவரது எதிர்கால அரசியல் வளர்ச்சியில் இடையூறுகள் ஏற்படும் என்றார். முன்னதாக கட்சியினர் மத்தியில் பேசிய ராஜேந்திர பாலாஜி,
அடுத்த ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி என்பது காலம் செய்த முடிவு திமுகவினர் அச்சமடைந்துவிட்டார்கள். அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு பெருகும் ஆதரவை கண்டு எங்களுக்கே வியப்பாக உள்ளது
15 லட்சம் பேர் பயனடையும் பட்டாசு தொழிலை பயங்கரவாத தொழிலாக மாற்றியது திமுக, அதிமுக மீது யார் கை வத்தாலும் வரும் மே மாதம் அதற்கான பலனை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.
பட்டாசு தொழிலில் 15 லட்சம் மக்கள் பணியாற்றி வருகின்றனர் ஒரு கோடி பேர் மறைமுகமாகவும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் பட்டாசு உற்பத்தியாளர்களை மிரட்ட நினைத்தாலோ, பட்டாசு தொழிலை முடக்க நினைத்தாலோ, பட்டாசு தொழிலை கேலி பொருள் ஆக்கினால் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி பெற்று 500 வாகனங்களுடன் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுவேன்எங்கள் பட்டாசு தொழிலை முடக்க நினைத்தால் திமுக ஆட்சியை புதைகுழிக்குள் அனுப்பாமல் விடமாட்டோம். பட்டாசு தொழிலை முடக்க நினைப்பவர்களை நான் முடக்குவேன்.
பட்டாசு தொழிலை நசுக்கும் அதிகாரிகள் அதிமுக ஆட்சியில் பொறுப்பேற்றதும் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்.
பட்டாசு விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 10லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும். அதிமுகவில் என்னால் யாருக்கும் எந்த துன்பமும் வராது என்றார்.