• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டர்ப் மேட்ச் எனப்படும் எடப்பாடியார் கோப்பை கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சி

ByNamakkal Anjaneyar

Jan 26, 2024

திருச்செங்கோடு கருவேப்பம்பட்டி பகுதியில் 3 நாட்கள் நடைபெற உள்ள டர்ப் மேட்ச் எனப்படும் 7 பேர் கலந்து கொள்ளும் எடப்பாடியார் கோப்பை கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சியை அஇஅதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.

திருச்செங்கோடு கருவேப்பம்பட்டி பகுதியில் உள்ள டார்ப் மைதானத்தில் குடியரசு தினம் தொடங்கி மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக ஏழு பேர் கொண்ட அணி விளையாடக்கூடிய டர்ப் கிரிக்கெட் மேட்ச் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு முதலாம் ஆண்டு எடப்பாடியார் கோப்பை என பெயரிடப்பட்டு வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுகள் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. ராகா ஆயில்ஸ் தமிழ்மணி தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியை அதிமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தங்கமணி டாஸ் போட்டு துவக்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்சரஸ்வதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாடி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.