• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நலிந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி..,எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு..!

Byவிஷா

May 8, 2023

மே தினத்தை முன்னிட்டு, 314 நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்பநலநிதியுதவி வழங்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
“மே” தினத்தையொட்டி கழக அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 314 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா 1,00,000/- ரூபாய் வீதம் மொத்தம் 3 கோடியே 14 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி அளிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான ஈபிஎஸ் அறிவித்துள்ளார். உழைப்போர் திருநாளாம் “மே” தினத்தை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதியுதவி வழங்கும் திட்டம் இதய தெய்வம் அம்மா அவர்களால் தொடங்கப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.