• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலி – கோவையில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை…

BySeenu

Oct 29, 2023

கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக
தமிழக – கேரளா எல்லையான கோவையில் உள்ள 13 சோதனை சாவடிகளில் எஸ்.பி.பத்ரிநாரயணன் மேற்பார்வையில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக,தமிழக டிஜிபி உத்தரவின் பேரில் தமிழக – கேரள எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை மாவட்டம் கேரள எல்லைகளில் உள்ள 13 சோதனை சாவடிகளில் எஸ்.பி.பத்ரிநாரயணன் மேற்பார்வையில் 80 க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் கோவையில் உள்ள முக்கிய தேவலாயங்கள், கோவில்கள், மசூதிகள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 100 க்கு மேற்பட்டோர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழக – கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் மோப்ப நாய் உதவியுடன் வாகன தணிக்கை நடைபெறுவதை எஸ்.பி பத்ரிநாரயணன் நேரில் பார்வையிட்டார் பின்னர் , செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோவையில் உள்ள தமிழக – கேரளா எல்லை பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருவதாகவும், அது மட்டுமல்லாது பதட்டமான மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.