கே.எஸ்.என்.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கே. சீராளன் தயாரித்து சுக்ரன் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்”கடமை”
இத்திரைப்படத்தில் கே.சீராளன், சந்தியா, பீமாராவ்,தேவராஜ் சுப்ரமணியம்,பான்சி கோபி,டெலிபோன் தேவா, கோடம்பாக்கம் நாகராஜ்,பிரபாகரன், சரோஜாதேவி,நிம்மி, சி.பி.அசோக்குமார் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நேர்மையான அசிஸ்டென்ட் கமிஷனரான பணிபுரிந்து வருகிறார் படத்தின் நாயகன் சீராளன். சமூக விரோதமான செயல்களை செய்யும் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார் சீராளன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தகுந்த சாட்சியங்கள் இருந்தும் போலீஸ் உயர் அதிகாரிகளின் சிபாரிசு மற்றும் நீதிபதியின் ஆதரவோடு பல குற்றங்கள் சாட்சிகளை மாற்றியமைத்து நிரூபிக்கப்படாமல் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.
இதனால் மனவருத்தத்தில் இருக்கும் சீராளன் பனிக்காலம் முடிந்து ஓய்வு பெறுகிறார். தன் பதவியில் இருக்கும் போது சாதிக்க முடியாததை பதவி காலம் முடிந்தவுடன் தான் பணியில் இருக்கும் காலத்தில் தப்பித்துப் போன அனைத்து குற்றவாளிகளையும் தேடி சென்று பழி வாங்குகிறார் இதுதான் படத்தின் கதை.
போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நடக்கும் இன்னல்கள், இடர்பாடுகள், மற்றும் உயர் அதிகாரிகளால் நேர்மையாக பணிபுரியும் காவல் துறையினருக்கு ஏற்படும் மன பாதிப்புகளை தத்ருபமாக திரையில் காட்டியுள்ளார் இயக்குனர் சுக்ரன் சங்கர்.
நாயகனாக கே.சீராளன், நாயகியாக சந்தியா, ஆகிய இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் இசை ஒரு சிறிய படத்திற்கு தங்களால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு தங்கள் உழைப்பை கொடுத்துள்ளனர்.
மொத்தத்தில்”கடமை” ஒரு பொழுது போக்கிற்காக பார்க்க வேண்டிய படம்.