• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் தென்கரை கண்மாயில் ஆக்கிரமிப்புகளால், விவசாயப்பணிகள் பாதிப்பு

ByN.Ravi

Jul 15, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை கண்மாயில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், கண்மாயில் பாசன தண்ணீர் வரத்து இல்லாததால், விவசாய பணிகள் தேக்கமடைந்து விவசாயப்பணிகள் பாதிக்கும் நிலை உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தென்கரைக் கண்மாய்சுமார் 560 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மதுரை மாவட்டத்தில், பெரிய கண்மாய்களில் இது ஒன்றாகும் .
இந்த கண்மாய் பாசனத்தில் இருந்து தென்கரை, முள்ளிப்பள்ளம், கச்சராயிருப்பு, மேலக்கால்வரை சுமார் 10 கிராமத்தில், உள்ள சுமார் 1800 ஏக்கர் விவசாயம் இந்த கண்மாய் தண்ணீர் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த கண்மாயின் மேற்கு பகுதியில் ஒரு சிலர் சுமார் 100 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதிமேடாக உள்ளது. இதனால், இப்பகுதியில் உள்ள பாசனவிவசாயிகள் பலமுறை போராடி வருகின்றனர். ஆக்கிரமிப்
புகளை அகற்றி, தென்கரை கண்மாயில்,முழு அளவில் தண்ணீர் தேய்த்து வைக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். அதிகாரிகள் சற்றும் செவி சாய்க்காமல் ஆக்கிரமிப்புக் காரர்களுக்கு ஆதரவாக இருப்பதாக, விவசாயிகள் சந்தேகப்படுகின்றனர். இந்த ஆண்டு கடந்த 3ஆம் தேதி விவசாயத்திற்கு,பேரனை முதல் கள்ளந்திரிவரை பெரியார் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில், சிந்றனையில் இருந்து குருவித்திரை மன்னாடிமங்கலம் காடுபட்டி புதுப்பட்டி வழியாக தென்கரை வாய்க்கால் வழியாக தென்கரை கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேர வேண்டும் தற்போது 12 நாட்களாகியும் தண்ணீர் வராததால் இப்பகுதி விவசாயம் கேள்விக்குறியாகஉள்ளது என்று விவசாயிகள் குறை கூறி வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் பாலு, ராமகிருஷ்ணன் கூறியதாவது ,
தென்கரை கண்மாயிலிருந்து 10 கிராமங்கள் விவசாயம் செய்து வருகின்றோம். ஏற்கனவே பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், கண்மாயில் ஆக்கிரமிப்பு எடுக்க வலியுறுத்தி வருகிறோம். தற்போது,கடந்த 3-ஆம் தேதி தண்ணீர் திறந்து இதுவரை கண்மாய்க்கு தண்ணீர் வரவில்லை இங்கு பொதுப்பணித்துறை பணியாளருடைய உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்துள்ளதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட பணியாளர் இக்கண்மாய்க்கு தண்ணீர் தேக்கி வைப்பதில் கவனம் செலுத்துவதில்லை .இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய பணிகளுக்கான முதற்கட்ட வேலையை ஆரம்பிக்காமல், உள்ளோம். முறையாக தண்ணீர் வந்திருந்தால் தற்போது ,நார்த்தாங்கால்நெல்பாவிநெல் முளைத்திருக்கக்கூடிய நேரம் இது.ஆனால் ,
ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ஆதரவகாக லஸ்கர் செயல்படுவதாக, சந்தேகப்படுகிறோம். ஏனென்றால், தண்ணீர் திறந்து 13 நாள் ஆகியும் கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால், விவசாயம் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். விவசாயிகள்மீது அரசும், அதிகாரிகளும் அக்கறை கொண்டுஆக்கிரமிப்
புகளை அகற்ற, முன்வர வேண்டும் கண்மாயில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும் என்று, கேட்டுக் கொண்டுள்ளனர்.