• Mon. Jul 1st, 2024

கோவை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு…

BySeenu

Jun 28, 2024

கோவை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 20.24 அடியாக உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் எல்லை பகுதியில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. இந்த அணை கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு, மூன்று தினங்களாக அப்பகுதியில் அவ்வப் போது மழை பொழிந்து வருகிறது. நேற்றைய தினம் வழக்கத்தை விட கூடுதலாக 120 மி.மீ மழை பொழிந்து உள்ளது.

அதே நேரம் நேற்று முன்தினம் 55 மி.மீ அளவு மழை பொழிந்தது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் வரையேற்கப்பட்ட கொள்ளளவு 45 அடியாக இருக்கும் நிலையில் அதன் தற்போதைய நிலவரம் 17:00அடியாக உள்ளது. இது நேற்று முன்தினத்தை காட்டிலும் 3 அடி உயர்ந்து உள்ளது. இது ஒரே நாளில் பெய்த மழை பொழிவின் காரணமாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் 17:00 அடியாக இருந்த நிலையில் தற்போது 20:24 அடியாக இருக்கிறது. இந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடியாக உயர்ந்து உள்ள நிலையில் எஞ்சிய காலங்களிலும் தொடர்ந்து மழை காரணமாக அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரையேற்கப்பட்ட கொள்ளளவில் அணை உயரும் பட்சத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நீர் வெளியேற்றத்தை குடிநீருக்காக எடுத்து வருகின்றனர். தற்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து இருப்பது கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இன்றைய சிறுவாணி அணை நீர்மட்டம் – 20.24 அடியாக உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *