கன்னியாகுமரி கடற்கரை தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் நினைவு மண்டபம் வரை. மாணவ, மாணவிகள் பதாகை ஏந்திய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாணவ,மாணவிகளின் பேரணியை.
கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி போலீஸ் சப்_ இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் ஆகியோர் வாழ்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்த நிகழ்வில் மாநில திமுக இலக்கியப் பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் அன்பழகன், பள்ளி இயக்குநர் முகிலரசு, பள்ளி முதல்வர் தீபசெல்வி ஆகியோர் பங்கேற்றனர்.
விவேகானந்தா புரம் முதல் காந்தி மண்டபம் வரையிலான ஊர்வலத்தில் காவல்துறை பாதுகாப்பு பணியில் ஊர்வலத்துடன் சென்றனர்.