மதுரை மாநகர காவல் துறை ஆணையர் முனைவர் ஜே லோகநாதன் ஆணைக்கிணங்க.. போக்குவரத்து துணை ஆணையர்.. எஸ் வனிதா உத்தரவுப்படி.. மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர்.. பள்ளி சந்திப்புகள்,, பேருந்து நிறுத்தங்கள்.. மற்றும் முக்கிய போக்குவரத்து சிக்னல் சந்திப்புகளில் பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பயணம் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வும்.. போதைப்பொருளால் ஏற்படும் விபரீதம் குறித்தும் எடுத்துரைத்தார் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி சிம்மக்கல் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் மத்தியில் பாதுகாப்பான பேருந்து பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.. மேலும் பேருந்து படிக்கட்டில் நின்று கொண்டு தொங்கி கொண்டு சென்றால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும். விபத்தின் விபரீதம் குறித்தும் மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் உணர்வு பூர்வமாக எடுத்துரைத்தார்.

நிறைவாக பேருந்தின் படிக்கட்டில் நின்றுகொண்டோ, தூங்கிக்கொண்டோ, செல்ல மாட்டோம் என்று மாணவர்கள் அனைவரும் போக்குவரத்து ஆய்வாளர் முன்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.