• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருவனந்தபுரம் செல்ல ஓட்டுநர்கள் கண்டனம்..,

இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி.
சுற்றுலா பயணிகளின் வருகை,அவர்களது சுற்றுலாவை நம்பியே கன்னியாகுமரியில்
100_க்கும் அதிகமான கார்கள்,50_க்கும் அதிகமான சிறிய வேன்கள்(12_இருக்கைகள்) கொண்ட வாகனங்கள்.

கன்னியாகுமரியில் 50_க்கும் அதிகமான டிராவல்ஸ் அலுவலகங்கள் உள்ளன. இதில் ஒரேயொரு டிராவல்ஸ் மட்டுமே, கன்னியாகுமரி_ திருவனந்தபுரம் செல்ல தனித்தனி பாக்கோஜ் என நேற்று முதல் (நவம்பர்_04)ம்தேதி இயக்கத்தொடங்கிய நிலையில்.

கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா கார் ஓட்டுநர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில்.

ஒரு தனிப்பட்ட டிராவல்ஸ் இன்றும்(நவம்பர்_5) மீண்டும் வேனில் திருவனந்தபுரம் செல்ல பாக் கேஜ் முறையை செயல்படுத்த. குறிப்பிட்ட வேனை. வாடகை கார் ஓட்டுநர்கள், கன்னியாகுமரி ரதவீதியில் குறிபிட்ட வாகனத்தை தடுத்து நிறுத்திய நிலையில் காவல் துறை ஓட்டுநர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில். பிரச்சினைக்கு தீர்வு வரதா நிலையில்.

திருவனந்தபுரத்திற்கு வேனில் செல்லவிருந்த பன்மொழி சுற்றுலா பயணிகளை குறிப்பிட்ட வாகனத்திலிருந்து இரக்கத்துடன், அதற்காக வசூலித்த கட்டணத்தையும் திருப்பி கொடுத்தனர்.

ஓட்டுநர்கள் தங்கள் பிரச்சினையை ‘ஆர்டிவோ’ சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை தடுத்து நிறுத்திய வேன் தடுக்கப்பட்ட இடத்திலே நிற்பதால் கன்னியாகுமரி ரத வீதியின் கிழக்கு தெருவில் வாகனங்கள் இயக்கம் தடைப்பட்டுள்ளது.