தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 363 குக்கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.515 கோடியே 72 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, அதற்கான குடிநீர் வழங்கும் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். அவர் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி, குறுக்குச்சாலை, சந்திரகிரி ஆகிய நீரேற்று நிலையங்களை பார்வையிட்டார். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் குறித்தும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏக்கள் மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), சண்முகையா (ஓட்டப்பிடாரம்), கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, தூத்துக்குடி தாசில்தார் திருமணி ஸ்டாலின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”











; ?>)
; ?>)
; ?>)