• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

Byவிஷா

Oct 11, 2024

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு, இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.560 வரை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அக்டோபர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆயுத பூஜையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் 7,095 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7,550 ஆகவும், ஒரு சவரன் 60,400 ரூபாயாகவும் இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சரிவை கண்டாலும் என்று ஒரே நாளில் அதுவும் ஆயுத பூஜையை முன்னிட்டு ரூ.560 வரை சவரனுக்கு உயர்ந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெள்ளி விலையும் ஒரு கிராம் 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 102 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 1,02,000 ரூபாயாகவும் இருக்கிறது.