சென்னை வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் பொறியியல் கல்லூரியில், புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்’ ஸ்மார்ட் வகுப்பறை வளாகம் சிறப்பாக திறக்கப்பட்டது.

இதனுடன், கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதவியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட சமூக ஊடகக் கழகம், பண்பாட்டுக் கழகம், கலை மற்றும் அறிவியல் கழகம், மொழிக் கழகம் ஆகியவற்றின் தொடக்க விழாவும் நடைபெற்றது.
இந்த நவீன வளாகங்கள் மற்றும் கழகங்களை, கல்லூரியின் தாளாளர் நித்திய சுந்தர் செயலாளர் காமராஜ் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னிலை முதல்வர் தனபால், முதலாமாண்டு துறை தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்ட பேராசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் டிஜிட்டல் கற்றல் வசதிகள், ஸ்மார்ட் போர்டுகள், ஆடியோ விசுவல் உபகரணங்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, தாளாளர் நித்திய சுந்தர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாணவ மாணவியர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கல்வி வளர்ச்சிக்கும் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நிர்வாகத்திற்கு மாணவர்கள் தங்களது நன்றியையும் தெரிவித்தனர்.
மேலும், தாளாளர் நித்திய சுந்தர் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.










