• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம்..,

Byஜெ. அபு

Jul 30, 2025

தேனி மாவட்டம் சின்னமனூர் ரேக்ளா ரேஸ் நண்பர்கள் நடத்தும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சின்னமனூரில் இருந்து மேகமலை செல்லும் சாலையில் நடைபெற்றது.

இந்தப் மாட்டு வண்டி பந்தயத்தில் தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கு பெற்றன. இந்த போட்டியில் பங்குபெற்ற மாடுகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின இதில் மாடுகளையும் மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் மாடு, நடுமாடு, பெரியமாடு, என ஆறு வகையான பிரிவுகளில் 150 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுத்தொகையாக முதல் பரிசு, 20 ஆயிரம் ரூபாய் , இரண்டாம் பரிசு, 12 ஆயிரம் ரூபாய் , மூன்றாம் பரிசு, 10 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியானது சின்னமனூரில் இருந்து மேகமலை செல்லும் சாலையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையில் நடைபெற்றது.

மாட்டு வண்டி எல்லை பந்தயத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டுகளித்தனர்.