• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு, கூந்தல் முடிகள் தானம்

BySeenu

May 5, 2024

உலகசெவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லூரியில் மாணவ,மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் புற்றுநோயாளிகளுக்காக தங்களது கூந்தல் முடிகளை தானமாக வழங்கினர்..

இந்திய பயிற்சி பெற்ற செவிலியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை 2024 ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு புற்றுநோயாளிகளுக்காக செவிலியர்கள் கூந்தல் தானம் செய்யும் சாதனையை துவக்கி உள்ளனர்.. மண்டல வாரியாக நடைபெற்று வரும் நிலையில் கோவை மண்டலம் சார்பாக ஈச்சனாரி பகுதியில் உள்ள ஸ்ரீ அபிராமி நர்சிங் கல்லூரியில் புற்று நோயாளிகளுக்கான கூந்தல் தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பல்வேறு நர்சிங் கல்லூரிகளை சேர்ந்த செவிலியர்கள் தங்களது கூந்தல் முடிகளை தானம் அளித்தனர்..முன்னதாக இதன் துவக்க நிகழ்ச்சி ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. அபிராமி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இதில், இயக்குனர்கள் டாக்டர். செந்தில்குமார், டாக்டர் பாலமுருகன், , ஸ்ரீ அபிராமி செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்..சிறப்பு அழைப்பாளர்களாக,TNAI தென் மண்டல தலைவர் டாக்டர் ஜெய்னி கெம்ப்,துணை தலைவர் டாக்டர் ஜெயசுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
புற்றுநோயாளிகளுக்கு முடி தான செய்யும் இந்த நிகழ்வு ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற ஒரு சாதனை முயற்சியாக மண்டல ரீதியாக தொடங்கி உள்ளது. இதற்கான இறுதி நிகழ்வு சென்னையில் வரும் எட்டாம் தேதி நடைபெற உள்ளதாகவும்,. தானம் செய்யப்பட்ட கூந்தல்களை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என அபிராமி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செந்தில் குமார் தெரிவித்தார்..இந்நிகழ்ச்சியில்,பல்வேறு நிறுவனங்களில் இருந்து,,மொத்தமாக 15 செவிலிய ஆசிரியர்களும் மற்றும் 150 செவிலிய மாணவிகள் கூந்தல் தானம் செய்தனர்.. ஸ்ரீ அபிராமி செவிலியர் பயிற்சி கல்லூரியிலிருந்து 35 மாணவிகள் மற்றும் ஆசிரியர் ஒருவர் இதில் கூந்தல்தானம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.