• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரதமருக்கு எதிராக பதிவிடகூடாது . . .திமுக தலைமை உஷ்

புதிய மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடியை விமர்சித்து, எந்த பதிவும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என கட்சியினருக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.


ஆர்வக்கோளாறில் ஐடி விங் நிர்வாகிகளில் சிலர், மோடியை எதிர்த்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடக் கூடும் என்பதால் முன் கூட்டியே இந்த அறிவுறுத்தலாம். கடந்த காலங்களில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்த போது கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்த திமுக கருப்பு பலூன்களை பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் புதிதாக கட்டப்படுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12-ம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து அவர் விருதுநகர் செல்வதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் அலுவலகமும் தமிழக அரசும் செய்து வருகிறது. பொங்கல் பரிசாக தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தருவதாக பாஜகவினர் பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு திமுகவினரும் சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே, கடந்த காலங்களை போல் பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐடி விங்கில் உள்ள நிர்வாகிகளில் சிலர் ஆர்வக்கோளாறில் ஏதேனும் பதிவை வெளியிட்டோ அல்லது மோடிக்கு எதிரான ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தோ அரசுக்கு சிக்கல் ஏற்படுத்திவிடக் கூடாது என நினைத்த திமுக தலைமை அதுபோன்ற காரியங்களில் யாரும் ஈடுபடக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளதாம்.

இதனால் பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்தமுறை வரவேற்பு மழை மட்டுமே பொழியவிருக்கிறது. மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டிட கட்டுமானப்பணி அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது என்பதால், அவர்கள் தரப்பிலும் பிரதமர் மோடியை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

தமிழகம் வரும் பிரதமருக்கு ஸ்டாலின் நேசக்கரம் நீட்டும் நிகழ்வு தேசிய அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது தமிழகம் வந்த பிரதமர் மோடியை எதிர்த்து கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டதும் கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டதும் திரும்பிப்பார்க்கத் தக்கது. இப்போதே அதே திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் சூழலில், பிரதமருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் தயாராகி வருவது கவனிக்கத்தக்கது.