• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் ஆளுநரைக் கண்டித்து ஒட்டப்பட்டுள்ள திமுகவின் பரபரப்பு போஸ்டர்..!

Byவிஷா

Jul 5, 2023

தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கண்டித்து சேலம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒட்டி உள்ள போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.
சமீபத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியின் துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்தே நீக்குவதாக ஆளுநர் உத்தரவிட்டு சிறிது நேரத்தில் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சரை நீக்கியது கண்டிக்கத்தக்கது எனவும் ஆளுநருக்கு அமைச்சரவை நீக்கி அதிகாரம் இல்லை என திமுக உள்ளிட்ட பல கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சேலம் மாணவரின் பல பகுதிகளில் எங்கள் அமைச்சரை நீக்க நீங்கள் யார் என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதில் தமிழக பாஜக அரசின் குற்ற பின்னணி உள்ள 44 அமைச்சர்களை நீக்க மத்திய அரசுக்கும் குடியரசு தலைவருக்கும் கடிதம் எழுத கிண்டியாரே தயாரா? என்று கேள்வி கேட்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.