இந்தித்திரி பூ நிதி பகிர்வு பாரபட்சம் தொகுதி சீரமைப்பில் அநீதி மத்திய அரசின் போக்கை கண்டித்து, திமுக இளைஞரணி சார்பில் சாத்தூர் அருகே வெம்பகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கற்கரைராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார் ஜெயபாண்டியன் முன்னிலை வைத்தனர்.
முன்னாள் எம்பி தனுஷ் குமார் கலந்து கொண்டார். மத்திய அரசு தமிழ் வழி கொள்கையை குறை கூறி வருகின்றனர். தற்போது நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் தமிழ் வழி கல்வி படித்து தான் முன்னேறி உள்ளார். மத்திய அரசில் வெளியேறவு துறை அமைச்சராக இருந்து வரும் ஜெய்சங்கர் தமிழ் வழிக்கொள்கையில் படித்தவர் தமிழர்களுக்கு அறிவார்ந்த துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதே வெளிர்வு துறையை இந்தி மட்டும் தெரிந்த அமித்ஷா வகிக்க முடியுமா? தமிழ் எப்போது தோன்றியது என்பதை யாருக்கும் தெரியாது.

ஆனால் இந்தி தோன்றி 300 ஆண்டுகள் மட்டுமே ஆகி உள்ளன. மொழியை திணித்தாள் தாய்மொழி அழியும். தற்போது 543 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மக்கள் தொகையில் 7% கணக்குப்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை உயரும். அதன்படி பார்த்தால் தமிழகத்திற்கு தற்போது 71 எம்பிக்கள் வேண்டும். ஆனால் 30 எம்பிக்களாக குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வட மாநிலத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் தற்போது 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை நூத்தி முப்பது எண்ணிக்கை உயர்த்த முயற்சி செய்கின்றனர். இதை தடுப்பதற்கு இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். அணியற்று மற்ற மாநிலத்தில் ஸ்டாலின் பின்னால் வர தயாராக உள்ளனர். மத்திய அரசு பொறுப்பேற்று 11 ஆண்டுகள் ஆகி பட்டாசு தயாரிப்புக்கு எவ்வித முன்னேற்றம் தரவில்லை. மேலும் பட்டாசு ஏற்றுமதிக்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆனால் தொழிலாளர் வாழ்வாதாரம் துயராமல் உள்ளது. ஆனால் சீன பட்டாசுகளை துறைமுகம் மூலம் இறக்கி வருகின்றன. நான் சிவாஜியின் பட்டாசு விற்பனை குறைந்து வருகிறது. கொழும்பு துறைமுகத்தில் பட்டாசு விலை ஏற்ற தடை விதித்துள்ளது. அதனை மத்திய அரசு கண்டித்து, தடையை விளக்க எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வெம்பக்கோட்டை அகழாய்வில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வசித்துள்ளனர் என்பதும், அவர்கள் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பகுதிக்கு சென்று பொருட்களை வியாபாரம் செய்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது தமிழர்களுக்கு தமிழ் மண்ணில் மட்டுமே தெரியும் தமிழ் மொழியை கற்றுக் கற்றவர்கள் பல்வேறு சாதனை படத்தில் வரும் சான்று உள்ளது. சென்ற சுதந்திர தின விழாவில் தமிழக அரசால் உறுதியில் வேலுநாச்சியார் சிலை இருந்ததால் ஊர்வலத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனால் தமிழகத்தில் ஜாதித் தலைவர்களை சொல்லி மத்திய அரசு ஏமாற்ற முயற்சி செய்கிறது. சாதியால் பிளவு ஏற்படுத்துவதை இந்தி திணிப்பின் நோக்கம் என முன்னாள் எம்பி தனுஷ் குமார் பேசினார். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி கார்த்திக் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர். வெம்பக்கோட்டை கிளைச் செயலாளர் ரவிசங்கர் நன்றி கூறினார்.