தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அமித் ஷாவின் பொயெல்லாம் எடுபடாது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் திண்டுக்கல்லில் சூளுரைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார் .
தமிழக முதல்வர் சாலை மார்க்கமாக திண்டுக்கல் வருகை தந்தார். பொதுமக்கள் சார்பில் வழிநெடுகளும் அவருக்கு வரவேற்பு வழங்கப்பட்டது.
பின்பு நடந்த அரசு விழாவில் பங்கேற்று இரண்டு லட்சத்து 62 ஆயிரத்து 864 பயனாளிகளுக்கு ஆயிரம் கோடியே 82 லட்சம் (1082.86) மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3 கோடியே 337 கோடியே 84லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 21 கட்டிடங்களை திறந்து வைத்தார். 174 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 212 திட்டங்களுக்கான பணிகளை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம், ஜோதிமணி, எம்எல்ஏக்கள் செந்தில்குமார் காந்தி ராஜன் உட்பட பங்கேற்றனர்.
இந்த விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டம் வீரர்கள் பூமி, வீரம் நிறைந்த மண், வீரமங்கை வேலு நாச்சியார், ஹைதர் அலி ,திப்பு சுல்தான், ஊமத்துரை ,கோபால் நாயக்கர் உட்பட பல வீரர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடி வெற்றி பெற்றனர். திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல பணிகளை நாங்கள் செய்துள்ளோம். புதிய திட்டங்கள் இல்லாமல் திண்டுக்கல்லுக்கு வந்து நான் சென்றால் அது அர்த்தமல்ல. இதனால் சொல்லு திண்டுக்கல் குடிநீர் தெரு விளக்கு சாலை வசதிக்கு ரூ 14 கோடியே 20 லட்சம் செலவில் பணிகள் நடக்க உள்ளன. 2. பாதாள சாக்கடை பணிக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பழனி கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. நத்தத்தில் புதிதாக துவங்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரி ரூ. 18 கோடியே 50 லட்சம் ரூபாயில் புதிய கட்டிடம் கட்டப்படும். ஒட்டன்சத்திரம் அருகே மார்க்கம்பட்டியில் முருங்கை பதப்படுத்தும் கூடம் அமைப்பதற்கு ரூபாய் 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது அடுத்து. கொடைக்கானலில் 100 ஏக்கரில் சுற்றுலா பூங்கா வில்பட்டிகள் அமைக்கப்பட உள்ளது. ஒட்டன்சத்திரத்தில் கண்வலி கிழங்கு நியாயமான விலை கிடைக்க ஒன்றிய அரசுடன் சேர்ந்து மையம் அமைக்கப்படும். 8. ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குடியிருப்பு பகுதியில் ரூ.17 கோடியில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது வீண்பழிகளை சுமத்தி குறைகளை கூறி வருகிறார். நடக்காது என்பதை கூட திராவிட மாடல் அரசு நடத்தி காட்டி இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்த போது ஒரு தவறான கருத்தை சொல்லி இருக்கிறார்.
இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக கூறியுள்ளார். தமிழகத்தில் 4000 கோயில்களுக்கு குடமுழக்கு அவர் பாசையில் சொல்ல வேண்டுமானால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு கோவில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறதா அமித்ஷாவை கேட்கிறேன். அமித்ஷா அவர்களே உங்களுடைய பொய்கள் தமிழ்நாட்டில் எடுபடாது. இந்த ஸ்டாலின் இருக்க வரை தமிழ்நாட்டில் பாஜக கால் ஊன்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.




