மதுரை அலங்காநல்லூர் அருகே சால்வார்பட்டி வாவிடமருதூர் 15பி மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி பேசுகையில் ஒரு காலத்தில் ஆண்களால் தான் குடும்பம் தலைநிமிர்ந்து நின்றது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
குடும்பத்தை பெண்கள் தான் வழி நடத்துகிறார்கள் இதற்கு என்ன காரணம் என்று சொன்னால் நாளைக்கு அதை டிவியில் போட்டு விடுவார்கள்.
மேலும் இதற்கு காரணம் மக்களாகிய உங்களுக்கும் தெரியும் ஏனென்றால் சம்பாதித்த பணத்தை சாயந்திரம் வேறு பகுதிக்கு ஆண்கள் கொடுத்து விடுவார்கள் ஆகையால் அதனை நான் சொல்ல விரும்பவில்லை என்று அமைச்சர் மூர்த்தி பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கை திறந்து பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடும் திமுக அரசு,
ஆண்கள் மாலை நேரங்களில் டாஸ்மாக்கிற்கு தங்கள் வருமானம் முழுவதையும் கொடுப்பதால் தான் குடும்பம் சீரழிந்து விட்டதை போல் பேசியது கூட்டத்தில் இருந்த பெண்களில் மத்தியில் சலசலப்பு ஏற்படுத்தியது.
இது குறித்து அங்கிருந்த சில பெண்கள் கூறுகையில் ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை மாலை நேரத்தில் வேறு இடத்தில் கொடுப்பதாக கூறும் அமைச்சர்,
முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்லி மதுபான கடைகளை மூடச் சொல்லலாமே என கூறிச் சென்றனர்.
மேலும் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கி வரும் அமைச்சர் மூர்த்தி மீண்டும் இந்த தொகுதியில் வெங்கடேசன் தான் போட்டியிடுவார் அவருக்குத்தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கடந்த நான்கு ஆண்டுகளாக தொகுதிக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரத சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ விற்கு மீண்டும் சீட்டு வழங்கப்படும் என்றும் அவரை மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என அமைச்சர் கூறியது பொது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
மேலும் திமுக தலைமையின் அனுமதியுடன் சோழவந்தான் தொகுதிக்கு 2026 வேட்பாளரை அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளாரா எனவும் கேள்வி எழுப்பினர்.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சோழவந்தான் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களில் அக்கறை காட்டாத அமைச்சர் மூர்த்தி திடீரென சோழவந்தான் தொகுதியின் மேல் அக்கறை காட்டுவது பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
சோழவந்தான் எப்பொழுதும் அதிமுகவிற்கு சாதகமான தொகுதியாக இருப்பதால் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகளால் தொகுதி எங்கே கைவிட்டு போய்விடுமோ என பதட்டத்தில் அமைச்சர் பேசியதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினர்.