மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து கொட்டாரத்தில் திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

மகளிர் உரிமை தொகை 3 மாதங்களுக்கு சேர்த்து ரூ. 3 ஆயிரம் மற்றும் கோடைக்கால சிறப்பு நிதி ரூ. 2 ஆயிரம் என மொத்தம் 5 ஆயிரம் மகளிர் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதனைக் கொண்டாடும் வகையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கொட்டாரம் ஜங்ஷனில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு தலைமை வகித்தார். கொட்டாரம் பேரூர் செயலாளர் எஸ்.வைகுண்டபெருமாள் முன்னிலை வகித்தார்.
இதில் ஒன்றிய துணை செயலாளர் பிரேமலதா, மாவட்ட அணி பொறுப்பாளர்கள் பொன்.ஜாண்சன், தமிழன் ஜானி, மாவட்ட பிரதிநிதிகள் வினோத், பிரேம் ஆனந்த், கரம்பை மணி, செல்வன், அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் விஜய கங்காதரன், அகஸ்திலிங்கம், கொட்டாரம் மதி, ஐடி பிரிவு நிர்வாகிகள் சந்திரகலா, தேவகி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






