• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாகையில் தவெகவினர் மீது திமுகவினர் தாக்குதல்- 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

ByR. Vijay

Mar 7, 2025

வீட்டுமனை பட்டா கேட்டு மனு வழங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் நாகையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

நாகை அருகே வீட்டுமனை பட்டா  வழங்க கோரி தவெக சார்பில் மனு அளித்தவர்கள்‌ மீது திமுகவினர் தாக்கியதாக குற்றச்சாட்டு:இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி: தவெக சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம்  கருங்கண்ணி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் 26 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று முன்தினம் தவெக சார்பில் மனு அளிக்கப்ட்டது. இந்நிலையில்,தவெக சார்பில் மனு அளித்ததைக் கண்டித்து, திமுகவினர் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.மேலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து பேட்டியளித்த பெண் உட்பட  4பேரை  மானபங்கபடுத்தி தகாத வார்த்தைகள் கூறி திமுக பிரமுகர் மற்றும்  அவருடைய ஆதரவாளர்கள்‌ சிலர் சேர்ந்து தாக்கியதாக  கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் அந்த  பகுதியைச் சேர்ந்த வெண்மணி,பரமேஸ்வரி, சித்ரா,ராகிணி ஆகிய நான்கு பேரும் மற்றும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஒருவர் என 5பேர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தகவல் அறிந்து தவெக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் அக்கட்சியினர் 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனையில் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது .மேலும் இந்த விவகாரம் குறித்து நேரில் விசாரணை செய்ய கீழையூர் போலீசார், மருத்துவமனைக்கு வந்த நிலையில், ஏற்கெனவே புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உரிய நடவடிக்கை இல்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ‌