
சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில். முத்தமிழறிஞர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு, செம்மொழி நாள் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் செம்மொழி போராளிகளுக்கு பொற்கிழி வழங்குதல். இந்த சிறப்பு வாய்ந்த கூட்டத்தை புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி. வெங்கடேசன் தலைமையில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சா அரவிந்த் ரமேஷ் முன்னிலையில், இந்தக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றிட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழனால் வந்து தமிழை வளர்த்த கலைஞர் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய பேராசிரியர் அ.கருணானந்தம் நிறைவு உரை மற்றும் பொற்கிழி வழங்கிட நிதி துறை அமைச்சர் விருதுநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு நிறைவுறையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தொகுதி பொறுப்பாளர் சந்திரபாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் காரப்பாக்கம் கணபதி விருகை சட்டமன்ற உறுப்பினர் ஏ. எம். பிரபாகராஜா சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினார்கள். கடைசியாக கே.வி விஜயகுமார் 4 வது வார்டு உறுப்பினர் நன்றி உரை வழங்கினார்.
