• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னை பெருங்குடியில் திமுக சார்பில், நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்…

ByE.Sathyamurthy

May 10, 2025

சென்னை பெருங்குடியில் திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தை மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி அண்ணாமலை தலைமையில் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தினார். இந்த பொதுக்கூட்டத்தை மண்டலம் 14 மண்டல குழு தலைவர் எஸ். வி. ரவிச்சந்திரன் முன்னிலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன் சிறப்பு பேச்சாளராக. தலைமைக் கழக பேச்சாளர் சரவணன் சிறப்பாக தன் பேச்சால் கவர்ந்து பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று மிகச் சிறப்பாக பேசினார்.

அதனைத் தொடர்ந்து சோளிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பேசுகையில்..,

கட்சி நிர்வாகிகள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்தால் தான் இந்த முறை நம் கழகத் தலைவருக்கு வெற்றி காணிக்கை சமர்ப்பிக்க முடியும் என்று வெகு சிறப்பாக பேசி தன் கலகலப்பான பேச்சால் மிகச் சிறப்பாக உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் பேசுகையில், நம் கழகத் தலைவர் செய்த சாதனைகள் எண்ணற்ற சாதனைகள் அதை சொல்லி முடிய ஒரு நாள் போதாது என்றும், மகளிர் காண ஆட்சி மகளிருக்கு என்னற்ற சரிகை செய்திருக்கணும் நம் கழக தலைவரே மீண்டும் அரியணையில் அமரே செய்வோம் என்று வெகு சிறப்பாக தன் பேச்சாற்றலால் அனைவரையும் கவர கூட வகையில் தன் பேச்சால் சிறப்பாக பேசி உறைய முடித்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் தேவராஜன்,டேவிட் சௌந்தரராஜன், ஆறுமுகம், குமாரசாமி, திவாகர், ஜெய் மாமா இந்த உறுப்பினர்கள், ஷெர்லி ஜெய், சமீனா செல்வம், ஷர்மிளா தேவி, திவாகர் மற்றும் கட்சி நிர்வாகிகள், கழகத் தோழர்கள், மகளிர் அமைப்புகள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு, இந்த சாதனை விளக்க கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.