விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக கட்சி வேட்பாளராக சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் சாத்தூர் வெங்கடாசலா புரத்தைச் சேர்ந்த கடற்கரைராஜ் என்பவர் போட்டியிடுகிறார்.

சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கார்களில் ஊர்வலமாக சென்றனர். பின்னர் செல்லும் வழியில் உள்ள வெற்றி விநாயகரை வழிபட்டு அதன் பின்னர் ஊர்வலத்துடன் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்ற வேட்பாளர் கடற்கரைராஜ் தேர்தல் நடத்தும் அலுவலர் கனகராஜ் அவர்களிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் முடிந்து பின்னர் வெளியே வந்த கடற்கரை ராஜ் அவரைத் தொடர்ந்து மனு தாக்கல் செய்ய வந்த போட்டி வேட்பாளர் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் சந்தித்து கை குழிக்கு சிரித்த முகத்துடன் நட்பு பாராட்டினர்.



