• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உட்கட்சிப் பூசலால் திமுக கிளைச்செயலாளருக்கு அரிவாள் வெட்டு..!

Byவிஷா

Nov 27, 2023

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே உட்கட்சிப் பூசலால், திமுக கிளைச்செயலாளர் அரிவாளால் வெட்டப்பட்டு, காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் திமுக வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதூர் பாண்டியாபுரத்தின் திமுக கிளை செயலாளராக இருப்பவர் மாரிஸ் குமார். இவரை ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேலமீனாட்சிபுரம் கிராமத்தில் வைத்து அருணாச்சலம் என்பவரது மகன் ஏகேஎஸ் கண்ணன் என்பவர் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த மாரிஸகுமார் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
உட்கட்சி பூசலால் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் நிலையில், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜாவின் ஆதரவாளரான மாரிஸ் குமாரை வெட்டிவிட்டு தப்பியோடிய ஏகேஎஸ் கண்ணன் என்பவர் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையாவின் தீவிர ஆதரவாளராக இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மெத்தனம் காட்டி வருவதாக மாரிஸ்குமார் தரப்பில் சொல்லப்படுகிறது.