• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரியில் முதலாவது சர்வதேச வடிவமைப்பு வார நிகழ்ச்சிகள் துவக்கம்

BySeenu

Feb 10, 2025

முதலாவது சர்வதேச வடிவமைப்பு வாரத்தை முன்னிட்டு கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் செயல்படும் டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரியில் பிப்ரவரி 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதன் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் உலக டிசைன் அமைப்பின் தலைவர் தாமஸ் கார்வி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, டி.ஜே. அகாடெமி ஆப் டிசைன் கல்லூரியின் டீன் ரத்தன் கங்காதர்; சுவீடன் நாட்டை சேர்ந்த லுன்த் பல்கலைக்கழகத்தின் தொழில்துறை வடிவமைப்பு பிரிவின் பேராசிரியர் ஜஸ்ஜித் சிங்; பெங்களூரு ஃபோலெஸ் டிசைன் நிறுவனத்தின் நிறுவனர் மைகேல் ஃபோலெ மற்றும் எல்.எம்.டபிள்யு. நிறுவனத்தின் தலைமை ஸ்ட்ரடஜி அலுவலர் சௌந்தரராஜன் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

சனிக்கிழமை (8.2.25) முதல் அடுத்த வெள்ளி (14.2.25) வரை கல்லூரி மாணவர்களுக்கு டிசைன் துறையில் உலக அளவில் தனித்துவம் கொண்ட வல்லுநர்கள் வகுப்பு எடுக்க உள்ளனர். அதற்கடுத்து 17ம் தேதி தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கும் , வடிவமைப்பு துறை சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கும், வடிவமைப்பு துறை மீது ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்களுக்கும் வடிவமைப்பு தொடர்பான பயிலரங்கு நடைபெறும். அதற்கு மறுநாள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பயிலரங்கு நடைபெறும் அதையடுத்து 19-22 ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான டிசைன் கண்காட்சி நடைபெறும்.