• Fri. Dec 5th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோட்டில் டிஜே இசை நிகழ்ச்சி

ByNamakkal Anjaneyar

Jan 1, 2024

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஜே இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்ற புத்தாண்டு 2024 வருடப்பிறப்பை பெண்கள் குழந்தைகள் என ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்டம் பாட்டங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருச்செங்கோட்டில் மலை சுற்றி பாதையில் அமைந்துள்ள தனியார் கிரிக்கெட் மைதானத்தில் 2024 ஆம் புத்தாண்டு விழா வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நிகழ்ச்சியில் சின்னத்திரை மற்றும் யூடியூப் பிரபலங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக வந்த இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் டிஜே இசையுடன் வண்ண மின் விளக்குகளின் ஒளியுடனும் வான வேடிக்கைகளுடனும் ஆட்டம் பாட்டங்களுடன் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் நடனமாடி புத்தாண்டை மக்கள் வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.