• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நரகாசுரன் எனும் அரக்கனை இறைவன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகை..!

Byதரணி

Nov 12, 2023

நரகாசுரன் எனும் அரக்கனை இறைவன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என அழகுராஜா பழனிச்சாமி இது குறித்து அவர் வாழ்த்துச் செய்தி அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அழகுராஜா பழனிச்சாமி இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்துச் செய்தி அறிக்கையில் தமிழக மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க திருவிழா தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய தமிழக மக்களின் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை இறைவன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் மக்களால் கருதப்படும் இந்நிகழ்வுகளைப் பற்றி முழுமையாக விவரிக்கிறார்.

தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள அருள்மிகு சௌமிய நாராயணப் பெருமாள்” திருக்கோயிலின் திருத்தல வரலாறு தெரியவருகிறது.

நூலில் ஓர் குறிப்பு உள்ளது. அதாவது, திருமால் அவதாரத்தில் சிறப்பு பெற்ற பிரகலாதன் வழியில் தோன்றிய மகாபலிச் சக்கரவர்த்தி அசுரகுலத்தின் குருவான சுக்ராச்சாரியருடன் சேர்ந்து சதிச் செயல்களால் இந்திரனின் இந்திரலோகத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சுக்கிராச்சாரியார் உடன் சேர்ந்து, அசுவமேத யாகம் செய்தனர்! அதனால், இந்திரன் இந்திரலோகப் பதவியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டது! ஆதலால், இந்திரனைப் பெற்ற தாயான அதிதி சொல்லொண்ணாத் துயரம் கொண்டு, கசியப்பரிடம் முறையிட்டதன் விளைவாக, திருமாலின் அருளைப் பெறுவதற்காகவே 12 நாட்கள் பயோவிரதம்” மேற்கொண்டாள் இந்திரனின் தாய் அதிதி! 12 நாட்கள் இறுதியில் சங்குச் சக்கரத்துடன் திருமால் காடசியளித்து, “கசியப்பர் மூலமாக உனது கருவில் ஆண் மகனாக உருவெடுத்து, உபேந்திரனாக” இந்திரனின் தம்பியாகப் பிறப்பெடுத்து, இந்திரன் பதவியையும் இந்திரலோகத்தையும் காப்பேன்! என்று திருமால் உறுதியளித்துள்ளார்! அதுவே, உபேந்திரன் என்ற “வாமனர் அவதாரம்” ஆகும். பிரகலாதனின் பேரனாகத் தோன்றிய மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கியதுடன், இந்திரனின் பதவியை காத்தல் நிகழ்வே திருமால் அவதாரமான வாமனாவதாரம் ஆகும் இதன் மூலம் இந்திரனுக்கும், திருமாலுக்கும் உள்ள தொடர்பு இதைத்தான் நாடு முழுவதும் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறோம்.