தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தனியார் கிளப் சார்பாக ஐந்தாம் ஆண்டு டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் தேனி மாவட்டத்தில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி சேர்ந்த மாணவர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் கிளப் மாணவர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்
இதில் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் கேட்டகிரியில் போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்
மேலும் போட்டியின் இறுதியில் ஓவரால் அதிக புள்ளிகள் பெற்ற பள்ளிகளை தேர்வு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்கள் பிடித்த பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டனர்
அதனைத் தொடர்ந்து டேக்வாண்டோ போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

பின்னர் ஓவரால் அதிக புள்ளிகள் பெற்ற பள்ளிகளை தேர்வு செய்யப்பட்டனர் இதில் லட்சம்புரத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவ மாணவிகள் அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தனர் அவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது
இரண்டாம் இடத்தில் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது
மூன்றாம் இடத்தில் தேனி உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோப்பை வழங்கப்பட்டது
இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தனியார் கிளப் நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.








