வெம்பக்கோட்டை ஒன்றியம் இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி துவங்கியுள்ளது.
சிவகாசியில் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட பிராக்கியா அகடாமி நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருபது ஆயிரம் மதிப்புள்ள சீருடைகளை பிரியதர்ஷினி, சுரேந்திரன், ஆகியோர் வழங்கினார்கள்.
போட்டியினை முன்னாள் அரசு வழக்கறிஞரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான நல்லதம்பி தொடங்கி வைத்தார்.

சாத்தூர், ஆலங்குளம், சிவகாசி, கோவில்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்கப்பட்டி, ராமுத்தேவன்பட்டி உள்பட 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
வெற்றி பெறும் முதலாவது மற்றும் இரண்டாவது அணிக்கு திமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் பரிசுக் கோப்பைகான நிதியினை வழங்கினார்.
இறுதிப் போட்டியில் எதிர்கோட்டை, ராமு தேவன்பட்டி அணிகள் மோதின.இதில் எதிர் கோட்டை அணி வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி பேசியது.
கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன போட்டிகளை நடத்திய மருது கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிராமப்புறங்களில் இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமாக கலந்து கொள்ள வேண்டும். இதில் வெற்றி பெற்று அடுத்தடுத்த மாவட்டம், மாநில, அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கு பெற முடியும்.
ஏனெனில் சர்வதேச போட்டியில் விளையாடி வரும் வீரர்கள் சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான் என்பதை உணர வேண்டும். என கூறினார்.





