விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா இராமுத்தேவன்பட்டி கிராமத்தில் மருது ப்ரதர்ஸ் ஏற்பாட்டில், முதலாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி விமரிசையாக துவங்கியுள்ளது.


கிராமங்களில் உள்ள இளைஞர்கள் இடையே ஒற்றுமை மற்றும் ஒழுங்கை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த கிரிக்கெட் போட்டி, தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

போட்டியின் துவக்க விழா* முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரரும், முன்னாள் அரசு வழக்கறிஞரான நல்லதம்பி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த கிரிக்கெட் தொடரில் விருதுநகர் மாவட்டம் முழுவதிலுமிருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள்* பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன. போட்டிகள் இப்போ போட்டிகள் ஒவ்வொரு வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் லீக் முறையில் நடைபெற்று வருகின்றன.
தொடக்க விழாவில் கிரிக்கெட் அணி வீரர்கள் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.




