அரியலூர் மாவட்டம், அரியலூர் அண்ணாசிலை அருகில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்டம் கிளை சார்பில் “இடையூறுகளைக் கடந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் எதிர்வினைகளை மாற்றுதல்” என்கிற கருப்பொருள் கொண்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து எச்.ஐ.வி / எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார். சுமார் 300-க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட, இப்பேரணியானது அரியலூர் அண்ணாசிலை அருகில் தொடங்கி, தேரடி, சத்திரம் பேருந்து நிறுத்தம் வழியாக சென்று நிர்மலா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் வராமலும், பரவாமலும் தடுப்பது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர். மேலும் எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு மாணவ மாணவிகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பேரணியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வேதலட்சுமி, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், மாவட்ட உதவி திட்ட மேலாளர் விஜயபாரதி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகோபால், மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் ஜெயராமன், மாவட்டச் செயலாளர் சண்முகம், மாவட்டத் துணைத் தலைவர் எஸ் எம் சந்திரசேகர்,மாவட்ட பொருளாளர் எழில், முன்னாள் மாவட்ட தலைவர் நல்லப்பன் , நியமனத்துணை செல்வராஜ்,யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன், ஜூனியர் கிராஸ் மாவட்ட கன்வீனர் சிவசங்கர், நிர்வாகிகள் சகானா காமராஜ், சடையப்பன்,அசோக் குமார்,சத்தியமூர்த்தி,அம்சவள்ளி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








